எல்லாம் வல்ல இறைவனின் அருளாலும் திருநீலகண்ட நாயனார் அருளாசியுடனும், மாயாண்டி சுவாமிகள் நல்லாசியுடனும்
இஃது மற்ற இணையதளங்களைப் போல வணிக நோக்கிலோ, பணத்திற்காகவோ செயல்படும் இணையதளம் அல்ல.
நமது குலால பெண்கள் அனைவருக்கும், அவரவர் கல்வி கேள்வி திறன்களுக்கு ஏற்ப, உயர்ந்த இடத்தில் வேலைவாய்ப்பும், வாழ்க்கையும் அமையப் பெற வேண்டும் என்கின்ற நோக்கில்
எந்தவித பாகுபாடும் இன்றி, கிராமத்தில் உள்ள நமது குலால இன மக்களுக்கும், நகரத்தில் உள்ளவர்களுக்கு கிடைப்பது போன்ற அனைத்து வாய்ப்புகளும் முடிந்தவரை கிடைக்க வேண்டும் என்பதற்காக செயல்படும் ஒரு கூட்டு பிரார்த்தனையே . வெறும் பணத்தை கட்டி விட்டு வரன் தேடி கொள்ளலாம் என்கின்ற எண்ணத்தில் இங்கு யாரும் பதிவு செய்யாதீர்கள்
உங்கள் நெருங்கிய குலால உறவினர்கள் 30 பேர்களின் பெயர், ஊர், செல் நம்பர் உறவுமுறை இவற்றையும் பதிவு செய்ய வேண்டும்.
ஏனென்றால் உங்களை யாருக்கும் இந்த உலகத்திற்கு தெரியாது.
உங்களை இந்த உலகத்திற்கும் மற்றவர்களுக்கும் முன்னின்று அறிமுகப்படுத்துபவர்களே இவர்கள்தான்.
இந்த, குறைந்த பட்சம் 30 பேர்கள் இல்லாமல் உங்கள் மகன் / மகளுக்கு நிச்சயதார்த்தமோ கல்யாணமோ செய்ய முடியாது.
உங்களுடைய வரன் தேடும் பிரச்சனை இந்த மூன்று மாதத்திற்குள் முடிய வேண்டும் என்கின்ற நோக்கில் நீண்ட நெடிய அனுபவத்தில்தான் இதைக் கூறுகின்றோம்.
இந்த நவநாகரீக உலகில் இவர்கள்தான் நம்மை நெருங்கி நம்மை சுற்றி இருக்கின்ற கோள்கள்.
இவர்களிடம் நல்ல உறவை பேணாமல் எங்கோ இருக்கின்ற 9 கோள்களின் நடவடிக்கைகளை கணிப்பது ஏற்புடையதல்ல.
வெறும் பயோடேட்டாவை மற்றவர்களுக்கு அனுப்பி பிரயோஜனமே இல்லை.
உங்கள் மகன்/ மகள் ஜாதக குடும்ப விவரத்துடன் இந்த உறவினர்கள் பட்டியலையும் சேர்த்து அனுப்பினால் மட்டும்தான்
அவர்களுடைய உறவினர்ளுடன், உங்கள் உறவினர்களின் கலப்பு இருக்கும் பட்சத்தில் யாருடைய அறிமுகமும் தேவையில்லாமல் உடனடியாக எல்லாமே சுபமாகவும், விரைவாகவும் முடியும்
குலாலர் மணமாலை என்பது ஒரு கூட்டு பிரார்த்தனை
கூட்டு பிரார்த்தனைக்கு வலிமை அதிகம்
ஆடம்பரம் இல்லாமல் அனாவசிய செலவுகள் இல்லாமல் கூட்டாக செய்யப்படும் ஒரு பிரார்த்தனை
அல்லது பூஜை அல்லது யாகம்
எப்படி வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம்
குலாலர் மணமாலை என்பது இன்றைய நமது சமூகத்தை அப்படியே பிரதிபலிக்கும் ஒரு காலக்கண்ணாடி .
குலாலர் மணமாலை என்பது மணமக்கள் பற்றிய விவரங்களைக் காட்டும் ஒரு தகவல் பலகையே.
உங்களின் மேலான ஒத்துழைப்பும், எளிமையும், உங்களின் விடாமுயற்சியும், தியாகமும், எதையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவமும், கடவுள் பக்தியும் இருந்தால் தவிர
இதில் பதிவு செய்துவிட்டால் உடனே/ தானாகவே உங்களுக்கு தேவையான வரன் கிடைக்கும் என்கின்ற உறுதி கிடையவே கிடையாது.
kulalars.com இணையதளத்திற்கு வந்து பாருங்கள்.
SEARCH என்கின்ற பகுதியில் பிறந்த வருடம் வாரியாக வயது வாரியாக ஆண் பெண் பதிவு விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
உங்கள் மகன் அல்லது மகளுக்கு ஏற்ற வயதில் உள்ள வருடத்தை ஆண்/பெண்களின் விவரத்தை கிளிக் செய்யும் போது அந்த வருடத்தில் பிறந்தவர்களுடைய விவரங்கள் உங்களுக்கு தெரிய வரும்.
நட்சத்திர பொருத்தம், கல்வி பொருத்தம், தோஷப் பொருத்தம் , வேலைக்கு செல்லும் மனநிலை ஆகியவற்றை ஆராய்ந்து
உங்களுக்கு தேவையான அளவு இருந்தால் மட்டும் பதிவு செய்யுங்கள் .
பதிவு செய்துவிட்டு பிறகு எதுவுமே கிடைக்கவில்லை என்று வருத்தப்பட வேண்டாம்
இங்கே யாரும் புரோக்கர்கள் / இடைத்தரகர்கள் இல்லை
யாருக்கும் தனித்தனியாக ஜாதகங்கள் அனுப்பி கொண்டிருக்க இயலாது . ஆகவே ஒவ்வொருவரும் வயது வாரியாக பதிவு செய்யப்பட்டுள்ள பகுதிக்குச் சென்று Search அவரவர்களுக்கு தகுதியான, பொருத்தமான வயதிற்கு ஏற்றார் போல் வரன்களைத்தேடி நீங்கள் தான் பேசி திருமணம் முடித்துக்கொள்ள வேண்டும்
1)
LOGIN லாகின் செய்தவுடன்
தங்களுடைய வரன் தேடும் மகன் அல்லது மகள் விவரத்தை பதிவு செய்வதோடு மட்டுமல்லாமல்
அவர்களுடைய போட்டோ ஜாதகம் பயோ-டேட்டா இவற்றை
2)
அதன் தொடர்ச்சியாக உங்கள் 30 உறவினர்கள் விவரத்தையும் (பெயர், உறவு முறை, செல் எண், கிராமம்)அவசியம் பதிவு செய்யவேண்டும்
இஃது இரண்டு நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட இருக்கிறது
2.1)
உங்களுடைய தூரத்து உறவுகளுக்கு இவர்கள் மூலமாக உங்களை உடனடியாக அடையாளம் காட்டுவதற்காகவும்
( உங்கள் வரனின் ஜாதக /போட்டோ/ குடும்ப விவரங்கள் முதலில் இவர்களுக்கு தெரியப்படுத்தப்படும் )
2.2 )
அவர்களுக்கும் குலாலர் மணமாலை விழா அழைப்பிதழ்கள் / சம்பந்தமான செய்திகளை அனுப்புவதற்கும் பயன்படுத்தப்படும்
மணமக்கள் விவரங்களை நேரடியாக இணையதளத்தில் பதிவு செய்த பின்னர் & (மாதிரி படிவத்தை எங்களுக்கு வாட்ஸ் அப் செய்த பின்னர் )
எண் 2-ல் குறிப்பிட்டவாறு உங்கள் நெருங்கிய குலால உறவினர்கள் முப்பது பேர்களின் பெயர், ஊர் ,செல் நம்பர் , உறவு முறை
பட்டியலை நேரடியாக இணையதளத்தில் பதிவு செய்த பின்னர் அல்லது அந்த நகலை எங்களுக்கு வாட்ஸ் அப்
செய்த பின்னர் மட்டுமே
பதிவு கட்டணம் செலுத்த வேண்டும்
3)
இந்த இணையதள பதிவிற்கு பதிவுக் கட்டணம் ரூபாய் 1,000/- (ரூ.ஆயிரம்) ( for 365 Days only ) ( for 365 Days only )
98400 58201 D.SIVAKUMAR
என்கின்ற எண்ணிற்கு
GPay / PhonePe
மூலம் அனுப்பவும்.
நன்றி வணக்கம்
பணம் அனுப்பியதற்கான ஸ்க்ரீன் ஷாட் (Screen shot) அனுப்பும்போது
பணம் செலுத்தியவர் பெயர், செல்போன் எண் மற்றும்
மணமக்கள் பற்றிய விவரத்தையும் தயவு செய்து மேலே உள்ள எண்ணுக்கும் அனுப்பவும்.
குலால மணமக்கள் பதிவு
குலாலர் மணமாலை மூலமாக திருமணம் அமையப்பெற்றவர்கள் உங்கள் பத்திரிகைகளில் “நன்றி குலாலர் மணமாலை, www.kulalars.com" என்று அச்சிடவும்
உடையார், செட்டி, பிள்ளை, வேளார், நாடூர் ,பக்தர். . . என நமக்குள்ளே எத்தனை பிரிவுகள் இருந்தாலும் நாம் அனைவரும் குலாலர்களே
3 லிருந்து 6 மாதத்திற்குள் திருமணம் முடிக்க நினைப்பவர்கள், திருமணம் முடிக்க முடிவெடுத்தவர்கள், அதற்காக தாய், தந்தை , மணமக்கள் என மூவரும் ஒருங்கிணைந்து உழைப்பவர்கள் மட்டுமே இங்கு பதிவு செய்யுங்கள் .
இப்பொழுது பதிவு செய்து வைக்கலாம். 2,3 வருடங்கள் கழித்து திருமணம் செய்யலாம் என்கின்ற எண்ணத்தில் இங்கு பதிவு செய்யாதீர்கள்.
அதிக நாட்கள் உங்கள் மகன் அல்லது மகனின் ஜாதகம் உலா வந்தால் மக்கள் வெவ்வேறு விதமாக பேசுவார்கள்
உங்கள் மகன் அல்லது மகனின் போட்டோவை
ஏதேனும் ஆல்பத்திலிருந்து எடுத்து கொடுக்காதீர்கள்.
பெற்றோர்களுக்கு நடுவே நின்று போட்டோ எடுப்பதே சாலச் சிறந்தது.
பெற்றோர்களையும் அறிமுகப்படுத்தியதாக இருக்கும்
பாதுகாப்பானதும் கூட
வாழ்க்கையும், வாய்ப்பும், குருபலனும், இந்த பூமியில் ஒரே ஒரு முறை தான்.
எத்தனை பொருத்தங்கள் பார்த்தாலும் பொருளாதார பொருத்தம் தான் இன்றைய தேதியில் திருமணத்தையும், மனித வாழ்க்கையையும்
தீர்மானிக்கின்றது
குலாலரின் (திருகை) சக்கரம் தான் இன்றைய அறிவியலின் முதல் கண்டுபிடிப்பு
யாதும் ஊரே யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர் தர வாரா
. . . கனியன் பூங்குன்றனார்
கங்கை நதி புறத்து கோதுமை பண்டம்
காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்வோம்
சிங்க மராட்டியர்தம் கவிதை கொண்டு
சேரத்து தந்தங்கள் பரிசளிப்போம்
. . . .பாரதியார்
சமூகத்திற்காகப் போராடுங்கள்; போராட முடியவில்லை என்றால் எழுதுங்கள்; எழுத முடியவில்லை என்றால், பேசுங்கள்; பேசமுடியாவிட்டால் ஆதரியுங்கள் , உதவுங்கள்; அதுவும் முடியாது என்றால் உங்கள் பங்கிற்குப் போராடுபவர்களைத் தடுக்கவோ வீழ்த்தவோ வேண்டாம் .
பல நூல் படித்து நாம் அறியும் கல்வி …
பொது நலம் நினைத்து நாம் வழங்கும் செல்வம் …
பிறர் உயர்வினிலே நமக்கு இருக்கும் இன்பம்…
இவை அனைத்திலுமே இருப்பதுதான் தெய்வம்…