Welcome Guest # : Visitor
This web site is exclusively for Pot, Idol Makers by Birth
Home | Site Map
Site Map
மக்கள் தேசிய கட்சி குலாலர் சங்கம் தொடங்கியது


சென்னை, ஜன. 19–
தமிழ்நாடு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பு சார்பில் மக்கள் தேசிய கட்சி என்ற புதிய கட்சி தொடங்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழா மற்றும் கட்சி கொடி அறிமுக விழா இன்று நுங்கம் பாக்கத்தில் நடந்தது. கட்சி தலைவர் சேம.நாராயணன் கட்சி கொடியை அறிமுகம் செய்தார்.

சேம நாராயணன் காங்கிரஸ் கட்சியில் மாவட்ட தலைவராக இருந்தவர். குலாலர் சங்க மாநில தலைவராகவும் இருந்து வருகிறார். கட்சி தொடங்கியது பற்றி அவர் கூறியதாவது:–

தமிழகத்தில் 40 லட்சம் குலாலர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு போதிய சலுகைகளோ, அரசியல் அங்கீகாரமோ கிடைக்கவில்லை. எனவே புதிய கட்சி தொடங்கி எங்கள் பலத்தை நிரூபிக்க இருக்கிறோம்.

பாராளுமன்ற தேர்தலில் 20 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளோம். போட்டியிடும் தொகுதிகளில் வெற்றி பெற கடினமாக உழைப்போம். அடுத்த சட்டசபை தேர்தலில் நிச்சயம் எங்கள் பிரதிநிதிகள் சட்டசபைக்கு செல்வார்கள். அதற்கான முயற்சிகளில் ஈடுபடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

மக்கள் தேசிய கட்சி போட்டியிடும் தொகுதிகளும், வேட்பாளர் பெயர்களும் வருமாறு:–

ராஜகோபால் (கோவை),
பொன்னுசாமி (திருப்பூர்),
அங்கம்மாள் (ஈரோடு),

சுப்பிரமணியம் (சேலம்),
சிவக்குமார் (நாமக்கல்),
முத்து சொக்கன் (திண்டுக்கல்),

சுகுமாறன் (கன்னியாகுமரி),
முருகானந்த வேளார் (நெல்லை),
ராமன் (சிவகங்கை),

குப்புசாமி (கரூர்),
ரவி (திருவாரூர்),
செல்வம் (தஞ்சை),

சரவணன் (கிருஷ்ணகிரி),
ஆனந்த் (தர்மபுரி),
திருப்பதி (வேலூர்),

ரவி (கடலூர்),
ராமசாமி (வடசென்னை),
கணேசன் (தென்சென்னை),

தாயுமானவர் (மத்திய சென்னை),
கருணாகரன் (காஞ்சீபுரம்).

முன்னதாக சேம.நாராயணன் – ருக்மணி நாராயணன் தம்பதிகள் 70–வது பிறந்த நாளை கொண்டாடினார்.

அவருக்கு
தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின்,
காங்கிரஸ் எம்.பி. ஆரூண்,
காங்கிரஸ் நிர்வாகிகள்
எஸ்.எம்.குமார்,
ராயபேட்டை பாஸ்கர்,

உள்பட பலர் நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.

நிகழ்ச்சியில் பாவலர் கணபதி, மகேஷ் கண்ணன், கர்ணல் குப்புசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்
Maalai malar
Nakkeeran
Dinakaran