Welcome Guest # : Visitor
This web site is exclusively for Pot, Idol Makers by Birth
Home | Site Map
உண்மைதானுங்கோ = = > அரேபியாவில் ஆடு மேய்த்தவர் (வேண்டாம் வெளிநாட்டு மோகம்)
நீண்ட பைஜாமா குர்தா. கையில் ஒரு சூட்கேஸ். விமான நிலையத்தின் வெளியே தன்னைக் கடந்து செல்பவர்களிடம் எக்ஸ்கியூஸ் மீ. சார் ஒரு நிமிடம் எனச் சொல்லி சூட்கேசைத் தூக்கிக் காண்பிக்கிறார் அந்த வாலிபர். சூட்கேசின் வெளிப்புறத்தில் அரேபியாவில் ஆடு மேய்த்தவன் என எழுதப்பட்டிருந்தது. இவர் மனநலம் சரியில்லாதவரா.. என்ற ஐயம் தான் நமக்கும் முதலில் எழுந்தது. அவரிடம் பேசியபோது.. அவரது உயரத்தை விட அவர் மீதான மதிப்பு பன்மடங்கு அதிகரித்தது. .

அவர் பெயர் சேரன். கடலூர் மாவட்டம் திட்டக்குடியைச் சேர்ந்தவர். பொங்கல் தினத்தன்று நாம் அவரிடம் பேசினோம்.. அன்றைக்கும் சூட்கேஸ் சகிதம் மெரீனா பீச்சிற்கு கிளம்பிக்கொண்டிருந்தார்.. இனி சேரன் நம்மிடம்.. .

திட்டக்குடியில், மனைவி, மகனுடன் வசித்து வருகிறேன். தொடக்கத்தில் டெய்லர் வேலை செய்து சிலருக்கு வேலைகொடுத்து வந்தேன். 1994களிலேயே ஆறாயிரம் ரூபாய்க்கு குறைவில்லாமல் சம்பாதித்து வந்தேன். வெளிநாடு போவதற்கு கடன் வாங்கி ஏஜெண்டிடம் எண்பதாயிரம் கொடுத்தேன். வெளிநாட்டிலும் டெய்லர் வேலைதான் பார்ப்பேன் என ஏஜெண்டிடமும் ஸ்டிரிக்டாகச் சொன்னேன். .

அவரும் என்ன தம்பி அப்படி சொல்லிட்டீங்க. அங்க உங்களை ஆடுமாடு மேய்க்கவா அனுப்பப் போறோம். டெய்லரிங் விசா தான் வாங்கித் தருவோம்.என்றார். இதெல்லாம் 1995-ல் நடந்தது. நான்கைந்து மாதங்களுக்குப் பிறகு, வெளிநாடு போக ஏற்பாடு செய்துவிட்டதாகச் சொல்லி கூட்டிட்டுப் போனாங்க. .

மும்பையில் விமானம் ஏறி ரியாத்தில் இறங்கினோம். அங்கிருந்து அல்பஹா என்ற ஊருக்கு கூட்டிட்டுப் போனாங்க. அங்கிருந்து நூற்றைம்பது கி.மீட்டர் தொலைவிலுள்ள காடும் மலையும் நிறைந்த பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டேன். அங்கு ஏராளமான டென்ட் கொட்டகைகள் இருந்தன. சில கட்டடங்களும் இருந்தன. அதில் ஒரு கட்டட உரிமையாளர் முன்பாக என்னைக் கொண்டு போய் நிறுத்தினாங்க. மின்சார வசதி இல்லாத பகுதி அது.. இங்கு நமக்கு என்ன வேலை தரப்போறாங்க.. என யோசித்துக் கொண்டிருந்தேன். .

அப்போது என்னை கூட்டிச் சென்ற டிரைவரிடம் அங்கிருந்த உரிமையாளர் ஏதோ சொல்ல அவர் என்னிடம் அதை மொழி பெயர்த்தார். உனக்கு இங்கு ஆடு மேய்க்கிற வேலை. மாசம் ஐந்தாயிரம் ரூபாய் சம்பளம். அந்தச் சம்பளமும் ஆறு மாதத்துக்குப் பிறகு தான். என்றார். எனக்கு பூமியே பிளந்து அதுக்குள்ளாற நான் விழறது மாதிரி தோணுச்சு. .

எனக்கு டெய்லர் வேலை. செலவு போக மாதம் பத்தாயிரம் ரூபாய் சம்பளம்னு சொல்லித்தானே கூட்டியாந்தீங்க.. எனக் கேட்டேன். அதற்கு அவர்கள் ஆடுமேய்க்கத்தான் மூன்றாண்டு ஒப்பந்தம் போட்டு உன்னைக் கூட்டி வந்தோம். எங்களை மீறி நீ வெளியில் போகமுடியாது. அப்படி போனால் நாங்க சொல்லவில்லையென்றாலும் கூட போலீசார் உன்னை கைது செய்வார்கள்.. என மிரட்டியதோடு பாஸ்போர்ட்டையும் வாங்கி வைத்துக் கொண்டார்கள். ஒரு தகரக் கொட்டகையைக் காண்பித்து, அங்கு போய் தங்கிக்கொள்.. என்றார்கள். www.puradsifm.com .

இரவு முழுவதும் தூங்காமல் விழித்திருந்தேன். அதிகாலையில் தூங்கிவிட்டேன். முதலாளி வந்து பிரம்பால் அடித்து எழுப்பினார். கொஞ்சம் காய்ந்து போன ரொட்டித்துண்டுகளையும் ஐந்து லிட்டர் தண்ணீர் கேனையும் தந்து அறுபது ஆடுகளைக் காண்பித்து மேய்ச்சுட்டு வா.. என்றார். காலை எட்டு மணிக்கு கொளுத்தும் வெயிலில் ஆடுகளோடு கிளம்பினேன். மாலை ஏழு மணிக்கு களைச்சு போய் திரும்பினேன். கொஞ்சம் அரிசியும் பருப்பும் தந்து சமைச்சு சாப்பிட்டுக்கோ.. என்றார். .

மறுநாள் காலை ஐந்து ஜோடி வெள்ளை நிற பைஜாமா குர்தா தந்து போட்டுக்கோ.. இதை போட்டுட்டு தான் ஆடு மேய்க்கப் போகணும் என்றார். எனக்கு சந்தோஷமாக இருந்தது. ஷேக் மாதிரி கற்பனை செய்து கொண்டேன். கம்பீரமாக நடந்து ஆடு மேய்க்கப்போனேன். .

அன்று மாலை வீடு திரும்பியதும் முதலாளி என்னை ஏற இறங்க பார்த்துட்டு கடுப்பானார். கோபத்துடன் உள்ளே போனவர் பிரம்புடன் வந்து என்னை விளாசினார். காரணம் புரியாமல் அடி வாங்கிக்கொண்டேன். எதுக்கு அடிச்சீங்க-? என்றேன். வெள்ளை பைஜாமாவில் ஒட்டியிருந்த அழுக்கைக் காண்பித்து, ஆடு மேய்க்க அனுப்பினால் ஒரு இடத்தில் உட்கார்ந்து வேலை பார்த்திருக்கிறாய்.. இனி அப்படி நடந்தால் தொலைச்சுப்போடுவேன் என்றார். அப்போது தான் அவர் வெள்ளை நிற பைஜாமா தந்ததன் மர்மம் புரிந்தது. .

என்னைப் போல தமிழர்கள் பலர் ஆடு மேய்ப்பதைப் பார்த்தேன். ஆறு மாதம் முடிந்ததும் மாதம் ஐந்தாயிரம் ரூபாய் தந்தார்கள். அது என் சாப்பாட்டுக்கே செலவானது. அதுவும் பாதி வயிறுக்குத் தான் சாப்பிட முடிந்தது. கொஞ்சம் அதிகமாக சம்பளம் தாருங்க.. என்றால் போலீசில பிடித்து கொடுத்துடுவேன் என மிரட்டினாங்க. என்னைப் போல லட்சக்கணக்கான தமிழன் அங்கு இப்படி வேலை செய்கிறான். நகர்புறங்களில் வாழும் தமிழன் காரைத் துடைத்தும் கடைகளைப் பெருக்கி கழுவிவிட்டும் சொற்பமாக சம்பாதிக்கிறான். யார் முகத்திலும் நீங்கள் சிரிப்பைப் பார்க்கமுடியாது. .

அங்கிருக்கும் தமிழர்களிடையே ஒற்றுமையும் பரஸ்பர அன்பும் இருந்தாலும் யாருக்கும் யாராலும் பொருளாதாரரீதியாக உதவி செய்யமுடியாது. கவலையைத் தான் பகிர்ந்து கொள்ள முடியும். .

மூணு வருசத்துக்குப் பிறகு டிக்கெட் எடுத்துக் கொடுத்து அனுப்பினாங்க. ஊருக்கு வந்ததும் எனக்கு மனதே சரியில்லை. ஏமாத்திப் போட்டாங்களேங்கிற வருத்தம். கூட்டிட்டுப் போய் ஆடு மேய்க்க வைச்சுட்டாங்களேன்னு கோபம். குடிக்க ஆரம்பித்தேன். .

ஒருநாள் எனக்குள் தெளிவு பிறந்தது. எதுக்கு குடிக்கணும். நம்மைப் போல பிறர் பாதிக்காமல் இருப்பதற்கான சமூகச் சேவையைச் செய்யலாமே எனத் தோன்றியது. உடனடியாக சில மாத குடிப்பழக்கத்தை உதறினேன். .

என்ன செய்யலாம் என யோசித்தபோது தான் சூட்கேசில் வெளிநாட்டில் ஆடுமேய்த்தவன் என எழுதி வலம் வந்தேன். பலர் பார்த்துக் கேட்டார்கள். விஷயத்தைச் சொன்னேன். வெளிநாடு செல்வதால் ஏற்படும் விளைவுகளை விளக்கினேன். நம் உழைப்பை உள்ளூரிலேயே கொடுக்கலாமே என்றும் அறிவுறுத்தினேன். 1998-லேயே இந்தப் பிரசாரத்தைத் தொடங்கிட்டேன். அரேபியாவில் ஆடுமேய்த்த அதே சீருடையில் தான் என் பிரசாரம் இன்றைக்கும் தொடர்கிறது. .

இப்பவும் மாதத்துக்கு பதினைந்து நாள் சென்னை மெரீனா பீச், கோயம்பேடு பஸ்ஸ்டாண்ட், விமானநிலையம் மற்றும் தமிழகத் திலிருந்து வெளிநாடுகளுக்கு விமானம் செல்லும் விமானநிலையங்களுக்கு இதே சூட்கேசோடு போகிறேன். துண்டு நோட்டீஸ் கொடுக்கிறேன். .

இந்த சூட்கேஸ் சமாச்சாரத்தால் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டது. ஆனால் என் மனைவி தையல் தொழில் செய்து குடும்பத்தை நடத்தத் தொடங்கிவிட்டாள். இப்படி பெட்டியோடு போறது மனதுக்கு ஆறுதலாகவும் சமூக சேவையாகவும் இருக்கிறது. என்னை அப்படியே விட்டுவிடுன்னு என் மனைவியிடம் சொல்லிவிட்டேன். என் கூட வர்றப்ப மட்டும் இந்த சூட்கேஸைக் கொண்டு வராதீங்க.. என்றாள். இப்போது அதற்கும் ஓ.கே. நானும் அவ்வப்போது டெய்லர் வேலை பார்க்கிறேன். .

ஆரம்பத்தில் தனி மனிதனாக பிரசாரம் செய்து வந்த என் பின்னால் வெளிநாடு போய் நொந்து வந்தவர்களும் சமூக ஆர்வலர்களும் கணிசமான எண்ணிக்கையில் இருக்கிறார்கள். மூன்றாண்டுகளுக்கு முன்பு என்னையொத்த கருத்தைக் கொண்ட சிலரை இணைத்து மீட்பு அறக்கட்டளை உருவாக்கினேன். அவரவர் சம்பாதிக்கும் பணத்திலிருந்து கொஞ்சம் போட்டு அதை நடத்திட்டு வர்றோம். .

வெளிநாட்டில் சிக்கித் தவிப்பவர்கள் குறித்து தகவல் வந்தவுடன் களத்தில் இறங்கிவிடுவோம். இதுவரை எழுநூறு பேரை மீட்டிருக்கிறோம். டிசம்பர் மாதம் மலேசியாவில் இறந்த அழகப்பன், பெருமாள் என்கிற இரு தொழிலாளர்கள் உடலை அரசின் செலவில் இங்கு கொண்டு வந்தோம். எங்கள் தொடர் முயற்சியால் அரசே இறங்கி வந்து செய்த வேலை இது. .

நான் இப்ப சொல்றது ரொம்ப முக்கியம் சார் எனப் பீடிகையோடு தொடர்ந்தார்.. .

தன் பிள்ளை நல்லா படிக்கணும்னுதான் நினைக்கணுமே தவிர வெளிநாட்டில் வேலைக்குப் போய் சம்பாதிக்கணும்னு பெற்றோர்கள் நினைக்கக்கூடாது. இதை வலுவா சொல்லுங்க சார்.. என்றவாறே பெட்டியுடன் கிளம்பினார் சேரன்....










Site Map












நல்வாழ்த்துக்கள் வழங்குவோர்
குலாலர் திருவொற்றியூர் அண்ணாமலை- 9840109605
குலாலர் கொய்யாப்பழம் சீனிவாஸன். -9842089500 ஸ்ரீவில்லிபுத்தூர்
குலாலர் தளவாய்புரம் ஜெயராமன் -99420 25046
குலாலர் ஆதனூர் வேல்முருகன்-9600358016
குலாலர் திண்டுக்கல் வெள்ளைசாமி-9952863929
குலாலர் திண்டுக்கல் இராஜேந்திரன் -9842335628

குலாலர் கடலூர் சக்திவேல் -9442646246,
குலாலர் கடலூர் மாறன் -9442746330
குலாலர் பவானி சித்தேஷ்வரன் -98948 00355
குலாலர் கரூர் இராமசாமி -9944974885,

குலாலர் கோவை ஜீவரத்தினம் -9942928076,
குலாலர் மேட்டூர் யோகாம்பாள் பழனியப்பன் -9443238670,
குலாலர் குடியாத்தம் ஈஸ்வரப்பன் -9442122718,
குலாலர் வஸந்த் கேட்டரர்ஸ் பூவண்ணன் -9444143301
குலாலர் நசியணூர் கந்தசாமி -9976446367,

குலாலர் அவிநாசி வெங்கடாச்சலம் -9003669211,
குலாலர் வேப்பனஹள்ளி முருகேசன் -9443282721,
குலாலர் திருவொற்றியூர் சீனிவாஸன் -9840078358
குலாலர் திருவொற்றியூர் சந்திரன் -9444081650
குலாலர் அருப்புகோட்டை சீதாலக்ஷ்மி இராமசாமி -044.25735802

குலாலர் திருப்பத்தூர் சம்பந்தம் -9944251782
குலாலர் சின்னகம்மியம்பட்டு பாண்டியன்-9791298044
குலாலர் வக்கணம்பட்டி பன்னீர்செல்வம் -9442730525
குலாலர் வேலூர் சுப்பிரமணி -9443245928
குலாலர் வேலூர் பாஸ்கர் 9442967070 -அ.இ.கு.மு.க

குலாலர் வடசென்னை பரமசிவம் 9444821800 அ.இ.கு.மு.க
குலாலர் வடசென்னை இராமசந்திரன் -9176977214 அ.இ.கு.மு.க
குலாலர் கன்னியாகுமரி சுகுமாறன் -9842635805 அ.இ.கு.மு.க
குலாலர் திருநெல்வேலி கணேசன் -9360650822 அ.இ.கு.மு.க
குலாலர் விருதுநகர் கதிரேசன் -9443544842 அ.இ.கு.மு.க

குலாலர் தூத்துக்குடி ஷெண்பகம் -9677325021 -அ.இ.கு.மு.க
குலாலர் மதுரை இராமலிங்கம் -9894925744 -அ.இ.கு.மு.க
குலாலர் திருப்பூர் பழனிகணஷ் -9150104477 -அ.இ.கு.மு.க
குலாலர் திருப்பூர் செல்வம் -8122774586 -அ.இ.கு.மு.க


குலாலர் திருவண்ணாமலை விட்டல் -9443254993 -அ.இ.கு.மு.க
குலாலர் வெப்பனஹள்ளி முருகேசன் -9443282721 -தேமுதிக
குலாலர் புதுக்கோட்டை சேகர் -9952376117 -அ.இ.கு.மு.க
குலாலர் தேனி பாண்டியன் -9994634953 -அ.இ.கு.மு.க
குலாலர் கரூர் கார்த்திக் -9092262564 -அ.இ.கு.மு.க

குலாலர் அரியலூர் ஜெயங்கொண்டன் -9715622339 -அ.இ.கு.மு.க
குலாலர் மதுரை இராமலிங்கம் -9894925744 -அ.இ.கு.மு.க
குலாலர் திண்டுக்கல் சந்திரசேகர் -8940759600 -அ.இ.கு.மு.க

குலாலர் இராமநாதபுரம் தர்மராஜ் -9362711031 -அ.இ.கு.மு.க
குலாலர் காஞ்சிபுரம் வெங்கடேசன் -9381146133 -அ.இ.கு.மு.க
குலாலர் திருவள்ளூர் கிருஷ்ணன் -9751560485 -அ.இ.கு.மு.க
குலாலர் திருவேற்காடு செல்வம் -9677159321 -அ.இ.கு.மு.க

குலாலர் ஓசூர் சுந்தரராஜ்-9443244553


குலாலர் டாக்டர் சேம நாராயணன் 9444088955 இளங்கோ
குலாலர் பாவலர் கணபதி 9444211972 இளங்கோ
குலாலர் மகேஷ் கண்ணன் 9444784327 இளங்கோ
குலாலர் கர்னல் குப்புசாமி 9600071322 இளங்கோ
குலாலர் பழனி 9444930930 இளங்கோ


குலாலர் மும்பை பொன்ராஜ் 0996-9065364 சக்கரம்
குலாலர் இராமநாதபுரம் இரமேஷ்குமார் 9442-049636 சக்கரம்
குலாலர் திருநெல்வேலி முருகன் 9366-611180 சக்கரம்
குலாலர் சிவகங்கை இராமலிங்கம் 9843-369914 சக்கரம்
குலாலர் பரமக்குடி குருஸாமி 9994-408740 சக்கரம்
குலாலர் கோவை பாபு கணேஷ் 9842-231378 சக்கரம்


குலாலர் கோவை ஜீவரத்தினம் 9942-9280078 சக்கரம்
குலாலர் தென்காஸி மாரியப்பன் 9486-019174 சக்கரம்
குலாலர் வைகுண்டம் மாயாண்டி 9994-364377 சக்கரம்
குலாலர் வேலூர் ஜெகதீஸன் 9894-049881 சக்கரம்
குலாலர் சென்னை சங்கரன் 9444-452633 சக்கரம்


குலாலர் சிற்பி தீனதயாளன் 9444-216970 சக்கரம்
குலாலர் மதுரை நாகேந்திரன் 9344-110975 சக்கரம்
குலாலர் மதுரை ஆறுமுகம் 9843-654346 சக்கரம்
குலாலர் வஸந்த் கேட்டரிங் பூவண்ணன் 9444-143301 சக்கரம்
குலாலர் மேட்டூர் பழனியப்பன் 9942-48076 சக்கரம்
குலாலர் மேட்டூர் யோகாம்பாள் 9443-238670 சக்கரம்


குலாலர் பரமகுடி சுகுமார் 9003-399430 சக்கரம்
குலாலர் குருஸாமி 9443-105248 சக்கரம்
குலாலர் மதுரை பாஸ்கரன் 9443-619244 சக்கரம்
குலாலர் மதுரை புறநகர் கோவிந்தராஜ் 9952-811315 சக்கரம்
குலாலர் தெனி பாஸ்கரன் 9842-982936 சக்கரம்


குலாலர் விருதுநகர் போஸ் 0453-257720 சக்கரம்
குலாலர் சிவகாசி இரவி 9942-627280 சக்கரம்
குலாலர் சாத்தூர் காளியப்பன் 9486-720626 சக்கரம்
குலாலர் புது தில்லி கண்ணப்பன் 09818-760598 சக்கரம்
குலாலர் பழனிகணேஷ் 9443-063979 சக்கரம்
குலாலர் தூத்துக்குடி ஆறுமுகம் 9894-024268


குலாலர் சேலம் கோவிந்தராஜன் 9842-686177 சக்கரம்
குலாலர் சேலம் இராஜமாணிக்கம் 9283-196535 சக்கரம்
குலாலர் சுரண்டை செல்லதுரை 9786-780285 சக்கரம்
குலாலர் தேனி பழனி முருகன் 9442-825750 சக்கரம்
குலாலர் பவானி சித்தேஷ்வரன் 9894-800355 சக்கரம்
குலாலர் ஈரோடு வனிதா நாகராஜன் 9487-738670 சக்கரம்
குலாலர் சென்னை இராமலிங்கம் 9952-016060 சக்கரம்


குலாலர் டாக்டர் சச்சிதானந்தம் 9444-172533 அறங்காவலர் பி.எஸ்.உடையார் அறக்கட்டளை
குலாலர் சந்திரசேகரன் 9444-066766 அறங்காவலர் பி.எஸ்.உடையார் அறக்கட்டளை






Flag Counter
Courtesy: FaceBook, Purdsifm, Lankasrifm, Hindu, DinaMani, DinaKaran and many other Websites