Welcome Guest # : Visitor
This web site is exclusively for Pot, Idol Makers by Birth
Home | Site Map
1) Download குலாலர் மணமாலை PDF FORMAT
2)Download குலாலர் மணமாலை MS WORD format
3)Download குலாலர் மணமாலை list May 2018
குலாலர் மணமாலை 23-SEP-2018 இராஜராஜேஸ்வரி திருமண மண்டபம். ஜோலார் பேட்டை
1) ஏழை குலாலர்கள் அனைவரையும் வெளிக்கொணரவும்,

2) தாயை இழந்த அல்லது
தந்தையை இழந்த அல்லது
தாய் தந்தை இருவரையுமே இழந்த அல்லது
தாய் தந்தை இருவருமே இருந்தும் பொருளாதாரத்தால் வஞ்சிக்கபட்ட அல்லது

ஜாதகத்தாலோ, அல்லது தோஷத்தலோ வஞ்சிக்கபட்ட எ ந்த ஒரு குலால பெண்ணோ, அல்லது இளைஞனோ மூலையில் முடங்கி விடாமல் இருக்கவும்,
கல்வியோ, பொருளாதாரமோ, ஜாதகமோ
நமது இளைய சமுதாயத்தின் திருமண வாழ்க்கைக்கும்,
ஆரோக்கியமான எதிர்காலத்திற்கு தடைக்கல்லாக இருந்துவிடக்கூடாது என்பதற்காகவும்,

3) வெந்ததை தின்று, விதிவந்தால் மாள்வோம்
என்று நொந்து போகும்
ஏழை எளிய குலாலர்களின் வாழ்க்கையிலும் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தவும்

4) மண்பாண்ட தொழிலாளர்கள் அனைவரையும் தொழிலாளர்கள் நல வாரிய உறுப்பினர்களாக்கவும்,
அவர்கள் மழைக்கால மானியம் பெறவும்,
60 வயதான பின்பு, தொழிலாளர் நலவாரியத்திலிருந்து ஒய்வூதியம் பெற்றிடவும் போன்ற

5) தமிழக அரசின் பொன்னான பல நல்ல சீரிய திட்டங்களை
அடிமட்டத்தில் உள்ள கடைசி மண்பாண்ட தொழிலாளர்களுக்கும் கொண்டு செல்லவும்


அனைவரையும்
நம் சமுதாயத்தின் பார்வைக்கு கொண்டு வந்து

குலாலர்கள் மேம்பாடு அடையவும், வாழ்க்கை தரத்தை உயர்த்தவும்
நடத்தப்படுவது தான் இந்த குலாலர் மணமாலை நிகழ்ச்சி
ஏதோ நான் கற்ற கல்வி எனக்கு மட்டும் பயன்படாமல், என் குடும்பத்திற்கு மட்டும் பயன்படாமல், என்னுடைய குலத்திற்காக, என்னுடைய தொலைதூர சகோதர சகோதரிகளுக்காகவும் பயன்பட வேண்டி வடிவமைக்கப்பட்டது தான் இந்த குலாலர் மணமாலை.
குலாலர் மணமாலை.
இஃது கண் துஞ்சாமல், பசி நோக்காமல், காரியமே கண்ணாக, குலால இனத்தின் மேம்பாட்டிற்காக அயராது அல்லும் பகலும் தன்னலமில்லாமல் உழைக்கும் சமூக ஆர்வலர்களால் நடத்தப்படுகின்ற ஒரு நிகழ்ச்சி.
இஃது ஒரு யாகம்.
ஆடம்பரமில்லாமல்,
ஆர்ப்பாட்டமில்லாமல்,
அனாவசிய செலவுகள் இல்லாமல்
நடத்தபடுகின்ற இஃது ஒரு வேள்வி

பெண்களின் நிலையை உயர்த்தவும்,
அவர்களின் மனஉளச்சலை தடுக்கவும், ,
மனம்ஒன்றி சான்றொர் பெருமக்களால் நடத்தப்படும் இஃது ஒரு கூட்டு பிரார்த்தனை.
குலால சமுதாயத்தின் மணி மகுடத்தில் இன்னோரு முத்தான நிகழ்ச்சி.

குறள் 47:
இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை.
அறத்தின் இயல்பொடு இல்வாழ்கை வாழ்கிறவன்- வாழ முயல்கிறவன் பல திறத்தாரிலும் மேம்பட்டு விளங்குகிறவன் ஆவான்.

உலகெங்கும் வியாபித்திருக்கும் வரன் தேடும் குலாலர்கள் அனைவரும்,
திருநீலகண்டரை வணங்கும் அனைவரும்.
பொதுவாக குலாலர்கள் அனைவரும்.
ஒரே இடத்தில், ஒரே நேரத்தில் ஒரே நாளில் சங்கமிக்கும் நாள்தான்
23-செப்டம்பர். -2018, ஞாயிற்றுக்கிழமை. குலாலர் மணமாலை
இடம் : இராஜராஜேஸ்வரி திருமண மண்டபம். ஜோலார் பேட்டை
விழா செலவிற்கான கட்டணம் ரூ.500/- ( ஒவ்வொரு பதிவிற்கும்).
பல இலட்சங்கள் கொடுத்தாலும் அத்துனை பேர்களையும்
ஒரே நேரத்தில்
ஒரே இடத்தில் பார்க்க முடியாது.

குலாலர் மணமாலைக்கு வருவதற்கு முன் நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இரண்டே இரண்டு வேலைகள் தாம்.
1) இன்னும் 90 நாட்களில் உங்கள் மகனுக்கோ (அ) மகளுக்கோ திருமணம் நடைபெற உள்ளது என்று நம்பிக்கை வையுங்கள்
அவர்களின் திருமணத்திற்கு நீங்கள் குறைந்த பட்சம் 500 பத்திரிக்கைகள் அச்சிடப் போகின்றீர்கள்.
அவர்களில் சுமார் 200 பேர்கள் தொழில்சார்ந்த நண்பர்கள், அக்கபக்க சுற்றத்தினர்கள்.
மீதமுள்ள 300 பேர்கள் உங்கள் குலால உறவினர்கள்.
அவர்களின் பட்டியலை ( பெயர், ஊர், செல் நம்பர்) தயாரியுங்கள்.
நீங்களூம் உங்கள் வீட்டில் உள்ள அனைத்து குடும்பத்தினரும் தனித்தனியாக யோசித்து யோசித்து யோசித்து யோசித்து அநத பட்டியலை தயாரியுங்கள்.
அவர்கள் ஏழையா, பணக்காரா, படித்தவரா, படிக்காதவரா,அவர்கள் வீட்டில் திருமணத்திற்கு பெண் (அ) மாப்பிள்ளை இருக்கின்றாரா இல்லையா என்பது பற்றியெல்லாம் கவலை வேண்டாம். யோசித்து யோசித்து யோசித்து யோசித்து அநத பட்டியலை தயாரியுங்கள்.

இந்த வேலையை செய்யாதவர்கள் தாம் தங்கள் பிள்ளைகளுக்கு இன்னும் வரன் தேடிக்கொண்டிருக்கின்றனர்.
அந்த பட்டியலின் ஒரு நகலை, எங்களுக்கு உடனடியாக அனுப்பி வையுங்கள்

Emailto :deshankar2000@gmail.com
or in Whatsapp no 9444452633
or in Telegram no 9444452633
or by Post to kulalar Poovannan 9444143301, Vasanth Cateres. 34, Parasu Rama Eswaran Koil street, Ayanavaram Railway colony Chennai 600023.
அப்பொழுதுதான் உங்கள் உறவினர்கள் அனைவரையும் இந்த நிகழ்ச்சிக்கே வரசொல்லி எங்களால் அழைப்பு –SMS அனுப்ப முடியும்.

அந்த பட்டியலின் இன்னொரு நகலை குலாலர் மணமாலையன்று கொண்டு வந்து கொடுங்கள்.
அந்த குலாலர் மணமாலையன்று பதிவு செய்தோர் விவரத்தைஅவர்கள்க்கும் எங்களால தெரிவிக்க முடியும்.
ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தான் தன் பிள்ளை தானே வளரும் என்பது ஆண்டு அனுபவித்த தமிழ் கூறும் நல்லுலகின் சான்றோர் பெருமக்களின் வேதவாக்கு.

திருமணம் நிச்சயமாகட்டும் பிறகு எடுத்து தருகின்றேன் என்று நீங்கள் சொல்வது எனக்கு கேட்கின்றது. திருமணம் நிச்சயமான பின்பு யாரும் அந்த பட்டியலை கொடுத்ததாக வரலாறே இல்லை.

இந்த பட்டியலை நீங்கள் தயாரித்தால் தான் உங்கள் பலமூம் பலவீனமும் உங்களுக்கே தெரியும்.
உங்கள் வீட்டு திருமணத்தை எப்படி நடத்த வேண்டும் என்பது உங்களுக்கும் புரியும்.

2) இது வரை பதிவாகியுள்ள மணமக்களின் பட்டியலை இதனுடன் இணைத்துள்ளேன். அதில் உள்ள அனைத்து பெண்வீட்டாரிடமும் நீங்கள் போனில் பேசி, அறிமுகம் செய்து கொண்டு, நீங்கள் மணமாலை க்கு உங்கள் மகனுடன் வருவதை உறுதி செய்யுங்கள். அவர்களையும் அவர்கள் பெண்ணுடன் (எங்கள் சார்பாகவும்) வரச்சொல்லுங்கள்.
வாயில் இருக்கின்றது வழி..

இப்படி செய்தால் ஒரே நேரத்தில் அனைத்து பெண்களையும்/ பெண்வீட்டாரையும் தனித்தனியாக பெரும் பொருட்செலவு செய்து நேரில் சென்று பார்க்கவேண்டியதில்லை.
தினசரி கால் டாக்ஸி புக் செய்யவேண்டியதில்லை.
தினசரி பூ பழம் வாங்க வேண்டியதில்லை.
தினசரி துணைக்கு உங்கள் அக்காள், மாமா, சித்தி, சித்தப்பா என அனைவரையும் அழைக்க வேண்டியதில்லை.

பெண்வீட்டாருக்கும்
தினசரி பெண்பார்க்கும் படலம் இல்லை.
தினசரி சொஜ்ஜி பஜ்ஜி செய்ய வேண்டியதில்லை,
தினசரி அலுவலகத்தில் பர்மிஷன் போடவேண்டியதில்லை.
தினசரி பட்டுப்புடவை அணியவேண்டியதில்லை.
தினசரி ரோபோ போன்று நடக்க வேண்டியதில்லை.
தினசரி செயற்கையாக சிரிக்க வேண்டியதில்லை. ....
தினசரி மனஉளைச்சலுக்கு ஆளாக வேண்டியதில்லை.

கூடுதலாக சொல்லப்போனால்,
பெண்களே இஃது வரதட்சணை எனும் அரக்கனை ஒழிப்பதற்கான புரட்சி.
பெண்ணின் திருமணம் என்கின்ற பெயரில்
உங்கள் பெற்றோர்களை நடுத்தெருவில் நிற்க வைக்க வேண்டியது இல்லை.

ஜோலார் பேட்டை:-
தென்தமிழ் நாட்டிலிருந்து சேலம், தர்மபுரி வழியாக ஜோலார் பேட்டை-யை அடையலாம்

கர்நாடகத்திலிருந்து வருபவர்கள் ஓசூர்,. கிருஷ்ணகிரி வழியாக ஜோலார் பேட்டை-யை அடையலாம்

சிதம்பரம், பாண்டிசேரியிலிருந்து வருபவர்கள் திருவண்ணாமலை வழியாக ஜோலார் பேட்டை-யை அடையலாம்

சென்னை –யிலிருந்து வருபவர்கள் இரயிலில் வருவது சாலச்சிறந்த்து.
(KOVAI EXPRESS 6.10 Am at Central Station .. 3.30 hrs Journey . Arrival at Jolarpettai JTJ at 9.30 hrs)

செங்கல் பட்டு, காஞ்சிபுரம் வழியாக வருபவர்கள் வேலூர் வழியாக
ஜோலார் பேட்டை-யை அடையலாம்

மணமாலை படிவத்தைவிட உங்கள் உறவினர்கள் பட்டியல் அவசியம் அவசியம் அவசியம் அவசியம்
மிகவும் அவசியம்
முறையாக மணமாலை படிவத்தையும், உறவினர்கள் விவர (பெயர்- செல்நம்பர், ஊர்) படிவத்தையும் பூர்த்தி செய்து வரவேண்டும்.

மகன் (அ) மகள் (அ) இருவரையும் கண்டிப்பாக அழைத்து வரவேண்டும்.
தாய் தந்தை இருவருமே வரவேண்டும்.

( ஒருவேளை, தாயோ (அ) தந்தையோ (அ) இருவருமோ காலமாகியிருப்பின்) உறவினர்களை அழைத்து வரவேண்டும். தனியாக வருதல் கூடாது.

வரிசைப்படி பதிவு செய்யபடும்

காலையில் மணமக்கள் பதிவும்,
மதிய உணவிற்குப்பின் மணமக்கள் அறிமுகமும் நடைபெறும்.
இடைத்தரகர்களுக்கு அனுமதி இல்லை.
மணமக்களை நேரில் அழைத்து வந்தவர்களுக்குதான் முன்னுரிமை கொடுக்கப்படும்.

உறவினர்கள் பட்டியலை முறையாக பூர்த்தி செயத மணமகன் வீட்டார், பதிவு செய்த வரிசைப்படி
முதலில் மேடையில் அறிமுகம் செய்யப்படுவர்.
( குலாலர் மணமாலைக்கு நேரடியாக வந்திருக்கும் பெண்கள் மற்றும் பெண் வீட்டார்
மாப்பிள்ளைகளையும் மாப்பிள்ளை வீட்டாரையும்
நேரடியாக பார்க்க வேண்டும் என்பதற்காக).

பின்னர்

உறவினர்கள் பட்டியலை முறையாக பூர்த்தி செயத பெண் வீட்டார், பதிவு செய்த வரிசைப்படி அடுத்து அறிமுகம் செய்யப்படுவர்.
( குலாலர் மணமாலை க்கு நேரடியாக வந்திருக்கும் மாப்பிள்ளைகள் மற்றும் மாப்பிள்ளை வீட்டார்
அனைத்து பெண்களையும் / பெண்வீட்டாரையும்
நேரடியாக பார்க்க வேண்டும் என்பதற்காக).

அதன்பின்னர் தான் மற்றவர்கள் அறிமுகம் செய்யப்படுவர்

மணமக்களை. கண்டிப்பாக அழைத்து வரவேண்டும்.

மணமக்களை. நேரில் அழைத்துவராமல் உங்களுடைய பொன்னான வாய்ப்பையும், நேரத்தையும், பணத்தையும் இழக்கவேண்டாம்.

மதுரை, திருச்சி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கோவை, பழனி திண்டுக்கல், சிவகாசி ..
இன்னபிற இடங்களிலிருந்தெல்லாம் இன்றைய போக்குவரத்து கட்டணத்தில் இங்கு வந்து செல்வது சற்று சிரமமான விஷயம்தான். இருந்தாலும்
இதை குடும்ப சுற்றுலாவாக நிணைத்து கொள்ளுங்கள்

கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்.
ஆலயம் செல்வது சாலவும் நன்று
எனும் மூதுரைகேற்ப
ஜோலார்பேட்டை-யிலிருந்து திருப்பதி 195 கி.மி. தொலைவில் தான் உள்ளது (4 மணி நேர பஸ்பயணம்) எண்ணற்ற பேரூந்துகள் உள்ளன
திருப்பதிக்கு வெகு அருகில் ஸ்ரீகாளஹஸ்தி கோயில் உள்ளது.,
இங்கே ஒவ்வொரு திங்கட்கிழமையும் காலை 7.30 லிருந்து 9.00 மணிக்குள் விசேஷமாக இராகு கால பூஜை நடைபெறும்.
பூஜிப்பவர்களுக்கு சகல தோஷங்களும் நீங்குமாம்

குலாலர் மணமாலை நிகழ்ச்சிக்கு வருபவர்கள்,
முறையாக திட்டமிட்டு (உங்கள் செலவில்)
உற்றார் உறவினர்களுடன் வந்து,
இந்த கோயில்களையும், தரிசித்து, ஆண்டவன் அருள் பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
ஜோலார்பேட்டை இரயில் நிலையத்திற்கு அருகிலேயே தங்குவதற்கான பல ஒட்டல்கள் உள்ளன.
குலாலர் மணமாலை நிகழ்ச்சிக்கு வருபவர்கள் முன்கூட்டியே வந்து தங்க ஓட்டல் அறைகள் தேவைப்படுமானால், குலாலர் பன்னீர் செல்வத்தை 9442730525 அனுகவும்,

அருகு போல் முளைத்து,
ஆல் போல் தழைத்து
மா போல் காய்த்து
செழித்தோங்கி வாழ
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள

குலாலர் மணமாலை சங்கரன் M.A.,M.C.A 9444452633
www.tamilnadukulalars.in குலாலர்களுக்கான இன்னோரு கூடுதல் இணைய தளம்
குலாலர் மாசிலாமணி 9941280086 ,-, 8610670518
குலாலர் பூவண்ணன் 9444143301 வஸந்த் கேட்டரர்ஸ்
குலாலர் இயற்கை வைத்தியர் முருகன் 9442286660 திருநெல்வேலி


ஸ்ரீ திருநீலகண்டர் கல்வி அறக்கட்டளை நிர்வாகிகள்
திருப்பத்தூர் . வட.ஆற்காடு வேலூர் மாவட்டம்

குலாலர். பாண்டியன் 9791298044,தலைவர் குலாலர் மண்டமபம் விரிஞ்சிபுரம், வேலூர்,

குலாலர். பன்னீர்செல்வம் 9442730525,

குலாலர். இராஜேந்திரன் 9443442227.

குலாலர். தண்டபாணி 9486844636

++ ++++ +++ +++++ +++ ++++++ +++
திருவொற்றியூர் குலால நல சங்க நிர்வாகிகள்
+ + + + ++ ++

குலாலர் புதுக்கோட்டை .அண்ணாமலை 9840109605 பொருளாளர்

குலாலர் அருப்புகோட்டை ஸ்ரீனிவாஸன் 9840078358 பொது செயலாளர்

குலாலர் சிங்கம்புனரி பி.ஆர். சந்திரன் 9444081650 கெளரவ தலைவர்
குலாலர் கடலூர் பழனிவேல் 9444207528 துணை தலைவர்

குலாலர் திருவண்ணாமலை கே.ஆர்.வேலாயுதம் 9003051695 விழாகுழு உறுப்பினர்

குலாலர் வேலூர் பிரகாஷ் 9445173693

குலாலர் பவானி சித்தேஷ்வரன் 9894800355

குலாலர் கரூர் இராமசாமி 9944974885

குலாலர் கடலூர் மாறன் 9442746330

குலாலர் பூவண்ணன் 9444143301
வஸந்த் கேட்டரர்ஸ்
34, பரசு ராம ஈஸ்வரன் கோயில் 2வ்து தெரு,
அயனாவரம். இரயில்வே காலனி
சென்னை 600023

நமது குலால உறவினர்கள்
நமது குலால சங்கங்கள்
KMM HOROSCOPE FORMAT - PDF FILE
KMM HOROSCOPE FORMAT - docx FILE